Friday, July 3, 2009

ஆசைகள்

ஆசைகள் இல்லாதவர் யார்? எனக்கும் ஆசைகள் உண்டு! சன் டிவி! ஜெயா டிவி! பார்த்திட ஆசை.... குறிப்பாக குஷ்புவின் ஜாக்பாட் பார்த்திட ஆசை.... ஹை ஸ்பீட் இன்டர்னெட்டில் பிரவுஸ் பண்ணிட ஆசை.... எல்சிடி டிவியில் பார்த்திட ஆசை... உணர்வுகளை உள்ளம் கவர்ந்தவளிடம் பரிமாறிக்கொள்ள ஆசை.... கவலைகளை மறக்க ஆசை... இளம் பிராயத்துக்கு மாறிட ஆசை.... விமானத்தில் பறந்திட ஆசை... உறவினர்கள், பழைய நண்பர்களை பார்த்திட ஆசை.... பழைய திரைப்படங்களை மீண்டும் பார்த்திட ஆசை..... புதிய கார்களை ஒட்டிப்பார்த்திட ஆசை.... பிறருக்கு உதவிட ஆசை....' பிறர் எனக்கு உதவிட ஆசை.... கடன் வாங்காமல் இருக்க ஆசை.... பிறருக்கு கடன் இல்லாமல் வாழ ஆசை.... மறுபிறப்பென்பது உண்மையானால், அதே தாய்க்கு மகனாக பிறந்திட ஆசை... இவ்வளவு ஆசை படுவது பேராசையா! தெரியவில்லை............................. ஆனால் கொஞ்சம ஆசை.... கொஞ்சம் கனவு.... இவை இல்லாமல் ஒரு வாழ்க்கையா? அது தேவையா?