Sunday, June 21, 2009

பரதேசி

பொழைக்க வழி தெரியலயே பொறந்த நாட்டுல..... நாங்க பொழப்ப தேடி வந்தோமே கனடிய நாட்டுல..... உயர் பள்ளிக்கூடம் போக நாங்க கொடுத்து வைக்கல கண்டியில..... எங்க பெத்தவங்களுக்கும் படிப்பின் அருமை ஒன்னும் அப்போ தெரியல..... அப்பன் பட்ட கடனெல்லாம் எங்க தலையில..... எங்க அக்கா தங்கை கல்யாணம் எங்க முதுகில..... பிறந்த குழந்தை முகத்தை பார்க்கும் பாக்கியமும் கிடைக்கல..... அப்பா அம்மாவுக்கு அதுல அக்கறை இருக்கிறதாவும் தெரியல..... பண்டிகைகள், திருவிழாக்கள் ஒன்னும் தெரியல..... நாங்க பீர் குடிச்சி படுத்தாலும் தூக்கம் வரல..... ஊரோடும் உறவோடும் சேர்ந்து வாழ துடிக்குது- இந்த பரதேசி வாழ்க்கை முடியும் காலம் எப்போது....?

No comments:

Post a Comment